ஜீவா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் விஷயங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். ‘கீ’படத்தின் ட்ரையிலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஜீவாவின் அடுத்தப் படமான ஜிப்ஸியின் டீசரும் வெளியாகி பலராலும் பேசப்பட்டது. எந்தப் படம் முதலில் திரைக்குவரும் என்று எதிர்ப்பாத்த நிலையில் கீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த படம் குறித்து ஜீவா நம்முடம் பகிர்ந்துகொண்டவை...
“கீ படத்தின் கதையை ஒரு படமாக பார்ப்பதை விட அவேர்னஸ் கொடுக்கிற விஷயமாகத்தான் நான் பார்த்தேன். கதை கேட்கும்போது 'இப்படியெல்லாம் நடக்குமா? இதெல்லாம் சாத்தியமா?' என்ற கேள்விகள் எனக்குள்ள இருந்துச்சு. நானும் கம்ப்யூட்டர் லைன்ல இருந்துதானே வந்தேன்... வெப்-சைட் கிரியேட் பண்றது, சாட்டிங் டெவலப் பண்றது, வாய்ஸ் நோட்ஸ் கமெண்ட் பண்றது, வெப் கேமராஸ் வந்தது, நிறைய லீக்ஸ் நடந்தது, ப்ளூவேல் கேம் வந்தது, டேட்டா லீக் ஆகுறது எல்லாமே கீ படத்தின் சீன்களில் இருந்துச்சு. இதெல்லாம் எப்படி நடக்கும், ரொம்ப அட்வான்ஸ்-ஆ இருக்கு, ஏதோ ஹாலிவுட் படத்திலிருந்து சுட்ட மாதிரி இருக்கு என்றுதான் நிறைய தயாரிப்பாளர்கள் இந்த படத்தைத் தயாரிக்கத் தயங்கினர்.
ஆனால், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக செய்திகளில் ஹாக்கெர்ஸ், படங்கள் எல்லாம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே இண்டெர்நெட்டில் ஒரிஜினல் பிரின்ட் ரிலீஸ் பண்றது, ப்ளூவேல் கேம் பிரச்சனை இதுமாதிரியெல்லாம் பார்க்கப் பார்க்கத்தான் எல்லோருக்கும் நம்பிக்கை வந்துச்சு. இதெல்லாம் உங்க கதையில் இருக்கிற மாதிரி இருக்கு சார்-னு சொன்னாங்க. அப்புறம்தான் படம் ஷூட் பண்ண ஆரம்பிச்சோம். இந்தக் கதையின் மையக் கருவே கிட்டத்தட்ட இப்போ பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் மாதிரிதான் இருக்கும். ஆனால், நாங்கள் இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே படத்தோட சூட்டிங் முடிச்சுட்டோம். அப்போ, இப்படியெல்லாம் வீடியோ எடுத்து மிரட்டி ஹராஸ்மெண்ட் நடக்குமா, அதை வச்சு பணம் பண்ணுவாங்களானு நிறையபேர் கேட்டாங்க.
ஸ்மார்ட் ஃபோன் முதலில் அறிமுகமான நாடுகளில் இதுமாதிரியான பிரச்சனைகள் அப்போவே நடந்திருக்கு. உதாரணமாக யு.எஸ், சைனா, சிங்கப்பூர், மலேஷியா மாதிரியான நாடுகளில் தமிழ் பேசுகிற மக்களிடையே கூட இப்படி நடந்திருக்கு. பொண்ணுங்கள வீடியோ எடுத்துவச்சு அடிச்சு துன்புறுத்தி ஹராஸ் பண்றது மாதிரியான நிறைய வழக்குகளை நாங்கள் பார்த்தோம். அதை வச்சுத்தான் இப்படி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கு என்று அந்த படத்தை ஷூட் பண்ணத் துவங்கினோம். ஷூட் பண்ணின பிறகும் நிறைய பிரச்சனைகள் வந்துச்சு. அதையெல்லாம் தாண்டி ஏப்ரல் 12-ல் படம் ரிலீஸ் ஆகப் போகுது. ‘கீ’ படம் கண்டிப்பா இந்த விஷயத்தில் ஒரு அவேர்னஸ்-ஐ கொடுக்கிற படமாக இருக்கும்.”