சுப்ரமணியபுரம் படம் மூலமாக இசையமைப்பாளரா அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அதற்கு முன்பே தமிழ் மக்களுக்கு டிவி நிகழ்ச்சிகள் மூலம் பரிச்சையமாகி இருந்தார். அவர் தனது பேஸ்புக்கில் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி ஒரு பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
“நேற்று ஒரு தமிழக அமைச்சரின் அலுவலகத்தில் அவருடன் பெரிய மீட்டிங்ல் இருந்தேன். அப்போதுதான், யாருக்கும் தெரியாமல், எந்த சத்தமும் இல்லாமல், இசைக்காகவும், இசைக் குடும்பத்திற்காகவும், ஏ.ஆர்.ரஹ்மான் எந்தளவிற்கு விடாமல் உழைத்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரிய வந்தது.
அவர் கனவு கண்டு வைத்துள்ள பல திட்டங்களுக்கு உதவி வேண்டி, அவர் தமிழக அரசாங்கத்தை அணுகியிருக்கிறார். அனைத்துமே நீண்டகால திட்டங்கள். அவை அனைத்தையும் பார்க்க அவர் தலைமுறையே கூட இல்லாமல் போகலாம். ஆனால், அவருடைய கனவுகளும் அதை அத்தனை உறுதியாக அவர் முன்னெடுக்கும் விதம் ஆச்சரியப்படுத்துகிறது.
உங்களில் சிலருக்கு ‘சன்ஷைன் ஆர்செஸ்ட்ரா’ பற்றி தெரிந்திருக்கும். குப்பங்களில் இருந்தும், கஷ்டப்படுகிற சமூகத்தில் இருந்தும் வருகிற சிறு வயது இசைக் கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு ம்யூகிக் க்ரூப் அது. ஒருகாலத்தில் யாராலும் கண்டுக்கப்படாம, தீண்டத்தகாதவர்களாக இருந்த பசங்களை இப்போ ஊரே கொண்டாடுகிற இசைக்கலைஞர்கள். அரசாங்க பள்ளிகளில் படித்துக்கொண்டே, ஒவ்வொரு நாளும் ஸ்கூல் முடிந்தபின், ரஹ்மானோட ம்யூசிக் ஸ்கூலுக்கு ரிகர்சலுக்காக இந்த பசங்க ஓடுகின்றனர்.
அவர்களை தேர்ந்தெடுத்து, இப்போது வரைக்கும் உயர் வகுப்பினருக்கு மட்டுமே கிடைக்கின்ற வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசையை, அவர்களுக்கு சொல்லி தருகிறார் ரஹ்மான். அவரகள் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றத்த ஏற்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்.
அவர் செய்துக்கொண்டு இருக்கின்ற வேலைகளில் இது ஒரு சோற்று பதம்தான். சமூகத்தில் இருந்து அவருக்கு கிடைத்ததை விட அதிகமாக அவர் சமூகத்திற்கு கொடுத்துக்கொண்டு இருக்கார். இது போன்ற ஒரு விஷயத்தை இதுவரை யாரும் பண்ணவில்லை. அவர் பல உயரங்கள் போய்க்கொண்டே இருப்பதிலும், மேலும் மேலும் வலிமையாக்கொண்டே செல்வதிலும், லட்சக்கணக்கான மக்கள் அவரை ஒரு ரோல் மாடலா பார்பதிலும் எந்த ஆச்சர்யமும் இல்லை.
Keep going ARR” என்று பதிவிட்டுள்ளார்.