டைட்டானிக், அவதார் என இரு பிரமாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் டீமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
— James Cameron (@JimCameron) May 9, 2019
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு சாட்சியாக இப்படம் வசூல் வேட்டையில் இறங்கியது. உலகளவில் அதிக வசூல் பெற்ற படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த டைட்டானிக் வசூலை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம். அவதார் படம் 2 பில்லியன் டாலரை 47 நாட்களில் கடந்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையையும் 11 நாட்களில் கடந்து முறியடித்துள்ளது.
வசூல் சாதனையில் முதலிடத்திலுள்ள அவதார் சாதனையையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படிகிறது. இந்நிலையில் ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் டீமிற்கு வாழ்த்து செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“கெவினுக்கும் மற்றும் அனைத்து மார்வெல் உறுப்பினர்களுக்கும், நிஜ டைட்டானிக் கப்பலை ஒரு பனிப்பாறை மூழ்கடித்தது. என்னுடைய டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடித்துவிட்டது. லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் உறுப்பினர்கள் அனைவரும் உங்களின் மகத்தான சாதனைக்குத் தலைவணங்குகிறோம். திரைப்படத் துறை துடிப்போடு இருக்கிறது என்று மட்டும் நீங்கள் காட்டவில்லை. அது முன்பை விட பெரியதாக இருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறீர்கள்” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவெஞ்சர்ஸ் லோகோ‘ஏ’டைட்டானிக் கப்பலை தலைகீழாக கவிழ்ப்பதுபோல அந்த பதிவில் படம் ஒன்று இருப்பது குறிப்படத்தக்கது.