Skip to main content

“அந்தப் பாடலை தொடர்ச்சியாகக் கேட்க வைப்போம்”- போலீஸின் விநோத தண்டனை!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020


கடந்த 2009 அபிஷேக்  மற்றும் சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'டெல்லி 6'. இந்தப் படத்தை ஓம் பிரகாஷ் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் இசை ஆல்பம் செம ஹிட் அடிக்க, மசக்கலி என்ற பாடல் ஹிந்தி பேசாதவர்களிடமும் ஹிட் அடித்தது.
 

jaipur

 

இந்நிலையில் இந்தப் படத்திலுள்ள பிரபல பாடலான மசக்கலி பாடலை ரீமேக் செய்து வெளியிட்டது டி-சீரிஸ். இந்த வீடியோவில் சித்தார்த் மல்ஹோத்ராவும் தாரா சுதாரியாவும் நடித்துள்ளனர்.

மசக்கலி பாடலை ரீமேக் செய்து அதை கேவலப்படுத்திவிட்டார்கள், இந்த வெர்சன் ரிலீஸ் செய்யாமலே இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் குவிந்து வருகிறது. இதனால் ட்விட்டரில் மசக்கலி 2.0 என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டானது.
 

 

 

இந்தப் பாடலின் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் வேதனையில் இருப்பதாக அவரின் ட்விட்டர் பதிவு தெளிவுப்படுத்தியது. ரஹ்மானின் ரசிகர்களும் அந்தப் பாடலை சமூக வலைத்தளத்தில் கலாய்த்து வர, ஜெய்பூர் போலீஸ் ஒருபடி மேலே சென்று அந்தப் பாடலை கேட்க வைத்து தண்டனையாக வழங்கி வருகிறது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது வெளியே நடமாடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் போலீஸார் விதவிதமான விசித்திரமான தண்டனைகளை வழங்கி வரும் நிலையில் மசக்கலி 2 ரீமீக்ஸ் பாடலை தொடர்ந்து கேட்க வைப்பது மிகப்பெரிய தண்டனைதான் என்று இணையவாசிகள் சமூக வலைதளத்தில் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்