Skip to main content

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெயில்’ பட டீசர் வெளியீடு!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

Jail Teaser

 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தின் அனைத்து பணிகளும் முன்னரே நிறைவடைந்த நிலையிலும், கரோனா பரவல் காரணமாகப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து, படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் பணியில் படக்குழு வேகம் காட்டிவருகிறது.

 

ஜெயில் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்