Skip to main content

'எனக்கு ஒரு முகமில்லை... நான்கு முகம்' - வெளியானது ஜெய் படத்தின் ரிலீஸ் தேதி

Published on 18/07/2022 | Edited on 18/07/2022

 

jai starrer 'Yenni Thuniga' movie release date announced

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் ஜெய் சமீபத்தில் வெளியான 'பட்டாம்பூச்சி' படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து சுந்தர்.சி இயக்கும் ''காஃபி வித் காதல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'எண்ணித்துணிக' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. 

 

இந்நிலையில் 'பட்டாம்பூச்சி' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்கள். இப்போஸ்டரில் ஜெய் ஒரு தண்ணீர் குட்டையில் முன்னாடி நிற்கிறார், ஆனால் அந்த தண்ணீரில் ஜெய்யின் நிழலுக்கு பதிலாக முகமூடி அணிந்த நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்