Published on 24/06/2022 | Edited on 24/06/2022
![jai helped actor manisha priyadarshini](http://image.nakkheeran.in/cdn/farfuture/Kh_sUvLJELIZNHjxV2E5TpMCrICkZ8FSs_ifvbgIId0/1656072757/sites/default/files/inline-images/1042_1.jpg)
'களவாணி' படத்தில் விமலின் தங்கையாக நடித்துப் பிரபலமானவர் மனிஷா பிரியதர்ஷினி. இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி இறுதி ஆண்டு படித்து வரும் இவர் அடுத்ததாக ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புகிறார். அதற்கான புத்தகங்களை வாங்க காசு இல்லாமல் தவித்து வந்த மனிஷா பிரியதர்ஷினி, நடிகர் ஜெய்யின் உதவியை நாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஜெய் மனிஷா பிரியதர்ஷினிக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கி கொடுத்துள்ளார். இதற்காக ஜெய்யை மனிஷா பிரியதர்ஷினி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது நன்றாக படித்து கலெக்டராக வேண்டும் என்றும், படிப்புக்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என ஜெய் உறுதியளித்துள்ளார்.