கரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் முடங்கியுள்ள நிலையில் திரையுலகினர் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் திரைத்துறைக்கு இதுவரை ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை சில கட்டுப்பாடுகளோடு தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதற்கு நன்றி தெரிவித்த ஃபெப்சி அமைப்பு நேற்று சினிமா படப்பிடிப்புகளை விரைவில் தொடங்க அனுமதி அளிக்க வேண்டி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பிய நிலையில் தற்போது தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு, கடம்பூர் ராஜுவை, தலைவர் திரு.ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுகுழு உறுப்பினர்கள் பி. ரங்கநாயக்கலு, பா.ரஞ்சித்குமார், எம்.சி.சேகர், ஜெ.மணிமாறன், டி.நாகலிங்கம், டி.சதாசிவமூர்த்தி, பி.தயாநந்தன் ஆகியோர் சந்தித்து திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியும், மேலும் சிறு படங்களுக்கான மானியம் கொடுக்க புளூரே டிஸ்க், ஹார்ட் டிஸ்க், கட்டணம் செலுத்தும் கால அவகாச தேதியை நீட்டித்து அறிவிக்கவும், மேலும் மானியத்தொகையை உடனடியாக வழங்கி சிறுபடத் தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிடக் கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.