![IT raid on the producer xavier britto house](http://image.nakkheeran.in/cdn/farfuture/cPGjABa-b1bQ0yYAOH_Pg__Xa6_E4vRGon5a6RDOsrg/1640146003/sites/default/files/inline-images/britto.jpg)
‘மாஸ்டர்’ பட தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். செல்ஃபோன் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![https://www.youtube.com/watch?v=tsybx8EILmw](http://image.nakkheeran.in/cdn/farfuture/B_ICCCerPkK7AeWHcvNqca2OU-hzh72muLNS2Ea_F88/1640146024/sites/default/files/inline-images/Rocky-article-inside-ad_4.jpg)
இந்தியாவில் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட செல்ஃபோன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வருமானத்தை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள செல்ஃபோன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமான வரித்துறையினர் நேற்றிலிருந்து (21.12.2021) சோதனை நடத்திவருகின்றனர். தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.