
ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா’.இயக்குநர்கள் சக்தி சிதம்பரம், உளவுத்துறை ரமேஷ் செல்வன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் பாண்டியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் நாயகன், நாயகியாக நிஷாந்த் ரூஷோ, காயத்ரிஷான் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில், பால சரவணன், லொள்ளு சபா மாறன், கும்கி அஷ்வின், சூப்பர் குட் சுப்ரமணியம், மற்றும் ஏராளமானோர் நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் வில்லனாக ஜெயிலர் புகழ் ஹர்ஷத் நடித்துள்ளார். சிங்கம்புலி சிறப்புத் தோற்றத்தில் கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு சமந்த் நாக் இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னைடில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது, “கொஞ்ச நாள் பொறு தலைவா இந்த விழா ஒரு குடும்ப விழாவைப் போல உள்ளது. எல்லோரும் நண்பர்களாக இணைந்து பணியாற்றியுள்ளனர். எல்லோரும் தயாரிப்பாளரைப் பற்றி மிக மகிழ்ச்சியாக பகிர்கிறார்கள். தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. உழைப்பவர்களுக்குச் சரியான ஊதியம் தந்த முதல்பட தயாரிப்பாளருக்காக, இப்படம் ஓட வேண்டும். இயக்குநர் விக்னேஷ் மிக அருமையாக இயக்கியுள்ளார். பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது. இசையமைப்பாளருக்கு வாழ்த்துக்கள். ஈழத்து கவிஞர் அஸ்மின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார், அவருக்குத் தமிழ் சினிமா நல்ல எதிர்காலத்தைத் தரும். நடிகர் நிஷாந்த் அருமையாக நடித்துள்ளார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.