Skip to main content

அரண்மனை 3 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Aranmanai 3

 

சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கும் கிடைக்க, தற்போது மூன்றாம் பாகத்தை உருவாக்கி ரிலீசிற்கு தயாராகிவருகிறது படக்குழு. ஆயுத பூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் அரண்மனை 3 திரைப்படம் வெளியாக இருக்கிறது.

 

இந்த நிலையில், அரண்மனை 3 படக்குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி இருந்தது எனக் கேட்கையில், அவர் கூறிய விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்தியது. அரண்மனை 3 படத்திற்காக 12 அடி உயர லிங்கம் செட் போட்டு படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பின்போது பொதுமக்கள் அது உண்மையான லிங்கம் என்று நினைத்து அதிகாலை கூட்டமாக வந்து தரிசனம் செய்தார்களாம். இதனால் சில நாட்கள் படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதமும் ஏற்பட்டதாம். 

 

அரண்மனை 2 படத்தின் படப்பிடிப்பின்போது போடப்பட்ட பிரம்மாண்ட அம்மன் சிலை முன்பு, இதேபோல மக்கள் திரண்டு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்