Skip to main content

இந்தியன் 2 இரண்டு பாகங்களாக வெளியாகிறதா..?

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
nfj

 

கரோனா அச்சுறுத்தலால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா துறை வேலைகள் சில நிபந்தனைகளுடன் தொடங்க தமிழக அரசு சமீபத்தில் அனுமதியளித்தது. இதைத்தொடர்ந்து திரைப்பட தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளான படத்தொகுப்பு, குரல் பதிவு, விஷூவல் கிராபிக்ஸ் போன்ற பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
 


இதற்கிடையே பல்வேறு காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு ஊரடங்கு முடிந்த பின் தொடங்கும் என லைகா நிறுவனம் சமீபத்தில் அறிவித்த நிலையில் 'இந்தியன் 2' படத்தின் எடிட்டிங் பணிகள் மீண்டும் தொடங்கி, இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியன் 2 படத்துக்காக இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே சுமார் ஐந்து மணிநேரம் ஓடியிருக்கிறது. அதை பார்த்த இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர், அதில் உள்ள அனைத்தும் முக்கிய காட்சிகள் என்பதால், படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாமா என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக புதிய தகவல் ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்