இயக்குநர் ஆடம் மெக்கே இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ள படம் 'டோன்ட் லுக் அப்'. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இரண்டு விண்கல்லை பற்றி தெரிந்து கொள்ளும் இரு விஞ்ஞானிகளை சுற்றி கதை நகரும் படி உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த டிசம்பர் மாதம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி இரண்டே வாரங்களில் உலகம் முழுவதும் 263 மில்லியன் நேரங்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளதோடு, பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இப்படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், " விண்கோள் ஒன்று மோதப்போவதால் பூமி சிதறப்போகிறதென்று பதறிச் சொல்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். அமெரிக்க ஜனாதிபதி சிகரெட் பிடித்துக்கொண்டே சிரிக்கிறார். உலகம் நகையாடுகிறது கடைசியில், அது நிகழ்ந்தே விடுகிறது. அழகான ஆங்கிலப் படம் Don't Look Up (மேலே பார்க்காதே) நீங்கள் மேலே பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விண்கோள் ஒன்று
மோதப்போவதால்
பூமி
சிதறப்போகிறதென்று
பதறிச் சொல்கிறார்கள்
நாசா விஞ்ஞானிகள்
அமெரிக்க ஜனாதிபதி
சிகரெட் பிடித்துக்கொண்டே
சிரிக்கிறார்
உலகம்
நகையாடுகிறது
கடைசியில்
அது நிகழ்ந்தே விடுகிறது
அழகான ஆங்கிலப் படம்
Don't Look Up
(மேலே பார்க்காதே)
நீங்கள் மேலே பாருங்கள் pic.twitter.com/vPRhvKJ4m0— வைரமுத்து (@Vairamuthu) February 9, 2022