மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் போபாலில் நடைபெற இருக்கிறது. அங்கே மிகப்பெரும் பொருட்செலவில் சண்டை காட்சி ஒன்று படமாக்க எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங் போபாலில் நடைபெறுவதையொட்டி, கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் ரசிகர்கள் கமலை வேறு கெட்டப்பில் பார்த்து ஆண்டுகள் சில ஆகியிருப்பதால் லீக்கான புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த சண்டை காட்சியை சுமார் 40 கோடி செலவில் உருவாக்க லைகா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், இந்த ஷூட்டிங் முடிவடைந்தவுடன் யூரோப்பில் சில காட்சிகள் படமெடுக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.