Skip to main content

விமர்சனங்களைப் பெற்ற இந்தியன் 2; படக்குழு எடுத்த முடிவு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
indian 2 crew trimmed lengthy shot after released

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியானது. 

வெளியான நாளிலிருந்து இப்படம், எதிர்பார்த்த அளவில் ரசிகர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தியன் 2 படத்தில், கமல்ஹாசனின் நடிப்பு பற்றி பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த படத்தின் திரைக்கதை, கமல்ஹாசனின் மேக் அப் குறித்து ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை வைத்து வருகின்றன. 

குறிப்பாக, இரண்டாம் பாதியில் மிக நீளமாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இதனால், இந்தியன் 2 படத்தில் 15 நிமிடக் காட்சிகள் படக்குழு நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்