காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பஞ்சாபி பாப் பாடகருமான சித்து மூஸ் வாலா கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் லாரென்ஸ் பிஷ்னாய் சேர்க்கப்பட்டுள்ளார். பாடகர் சித்து மூஸ் வாலா கொலை செய்யப்பட்ட பின்னர் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள லாரன்ஸ் பிஷ்னாயின் குழு பக்கத்தில் இந்த கொலை கூட்டாளி விக்கியின் கொலைக்கு பதிலடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வகை மான்களை பிஷ்னாய் சமூகத்தினர் புனிதமாக கருதுகின்றனர். இதை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு லாரன்ஸ் பிஷ்னாய் இந்த மானை கொன்றதற்காக சல்மான் கானை கொன்றுவிடுவோம் எனக் கூறியிருந்தார்.
பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொடூர கொலையை தொடர்ந்து பல வருடங்களுக்கு இந்த மிரட்டல் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து சல்மான் கான் வசிக்கும் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.