ஐ.எம்.டி.பி என்ற இணையதளம் உலகத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு பிரபலமான இணையதளம். மேலும், ஆன்லைன் மூலம் மக்கள் அளிக்கும் புள்ளிகளை வைத்து சிறந்த படம் குறித்த பட்டியலை மக்களுக்கு தொகுத்து வழங்குகிறது. இந்த இணையதளத்தில் டாப் இடத்தில் இடம்பெறுவது ஒரு அங்கீகாரமாகக் கருதப்படுகிறது. இதில் பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளையும் ரேட்டிங்கையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதளம் ஆண்டுதோறும் நிறைய பிரிவுகளில் பட்டியலை தொகுத்து வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த இணையதளம் 2024ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் பாலிவுட் நடிகை த்ரிப்தி டிம்ரி இடம் பிடித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் பாலிவுட் நடிகர் இஷான் கட்டர், நான்காவது இடத்தில் ஷாருக்கான், ஐந்தாவது இடத்தில் ஷோபிதா துலிபாலா, ஆறாவது இடத்தில் பாலிவுட் நடிகை ஷர்வாரி, ஏழாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், எட்டாவது இடத்தில் சமந்தா, ஒன்பதாவது இடத்தில் ஆலியா பட் மற்றும் பத்தாவது இடத்தில் பிரபாஸ் ஆகியோர் இருக்கின்றனர்.