இசைஞானி இளையராஜாவிற்கும் பிரசாத் ஸ்டூடியோவிற்கும் இடையேயான பனிப்போர் ஓராண்டு காலத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. பிரசாத் ஸ்டூடியோ வளாகத்தில் இருந்து தன்னை வெளியேற்றியதை எதிர்த்து, உரிமையில் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். பிரசாத் ஸ்டூடியோ தரப்பு தனது வாதத்தில் உறுதியாக நின்றதால் இவ்வழக்கு விசாரணையானது தொடர்ந்து நீடித்துவந்தது.
இந்த நிலையில், தனது அறையில் உள்ள இசைக் குறிப்புகள், கருவிகள் மற்றும் விருதுகளை எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். இவ்விசாரணையின் போது ஆஜரான பிரசாத் ஸ்டூடியோ தரப்பு, இளையராஜா வழக்கை வாபஸ் பெற்றால், அவரை உள்ளே அனுமதிக்கத் தயார் எனப் பதிலளித்தது.
பிரசாத் ஸ்டூடியோவின் கோரிக்கையை ஏற்ற இளையராஜா, தனது வழக்கை திரும்பப்பெற்றார். இதனையடுத்து, பிரசாத் ஸ்டூடியோவிற்குள் செல்லும் நாள் குறித்து இரு தரப்பும் பேசி முடிவெடுத்துக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.