Skip to main content

மேடையில் ரஜினி குறித்து பேசி தனுஷை நெகிழ வைத்த இளையராஜா

Published on 19/03/2022 | Edited on 19/03/2022

 

ilaiyaraaja shares dhanush ennulle ennulle paadal memories

 

சென்னையில் உள்ள தீவுத்திடலில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி 'ராக் வித் ராஜா' என்ற பெயரில் நடைபெற்றது.  இவ்விழாவில் கங்கை அமரன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனுஷ் மற்றும் அவரது இரு மகன்கள், பாடகர் மனோ, எஸ் பி.பி சரண் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை நடத்த அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா எஸ்.பி.பி மற்றும் லதா மங்கேஷ்கர் மறைவு வருத்தத்திற்குரியது என்றார். 

 

இவ்விழாவில் இசைஞானி இளையராஜா 'ஜனனி ஜனனி...' உள்ளிட்ட பல  பாடல்களைப் பாடினார். அவருடன் சேர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடகர் மனோ உள்ளிட்ட பலரும் மேடையில் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அப்போது "என்னுள்ளே என்னுள்ளே..." பாடலைப் பாடிய இளையராஜா அப்பாடலைப் பாடி முடித்த பிறகு மேடையின் எதிரே அமர்ந்திருந்த தனுஷிடம் எழுந்து நில் என்று கூறினார். அவரும் எழுந்து நிற்க, "இந்தப் பாடல் சிறப்பாக வர உன் மாமனார் ரஜினிகாந்த்தான் காரணம். அவர் அந்த ரசனையோடு, காட்சிகளின் சூழ்நிலையைக் கூறியதால்தான் 'என்னுள்ளே என்னுள்ளே...' பாடல் சிறப்பாகவும், இன்றளவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்த தனுஷ் கைதட்டி ரசித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்