Skip to main content

நடிகை ஸ்ரீப்ரியா வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு தெரியுமா..?

Published on 02/05/2021 | Edited on 03/05/2021

 

vddsbsb

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி நேற்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

 

அதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நடிகை ஸ்ரீப்ரியா சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் நடிகை ஸ்ரீப்ரியா 14, 850 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். இவருடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தா.வேலு 67,919 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும், இரண்டாம் இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் ஆர்.நடராஜன் 55,466 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

 

 

சார்ந்த செய்திகள்