தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வ்ரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு 'இளையராஜா 75' என்ற இசை கச்சேரி பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதையடுத்து இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது.... 'தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அளித்த மனுவில் இளைராஜா நிகழ்ச்சிகான செலவு குறித்த தகவல் ஏதும் இல்லை' என்று கூறிய நீதிபதிகள் நாளை மறுநாள் இளைராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இளைராஜா 75 இசை நிகழ்ச்சியை ஏன் ஒத்திவைக்கக் கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.