'பிக்பாஸ்' புகழ் ஹரிஷ் - ரைசா ஜோடியின் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாகும் 'பியார் பிரேமா காதல்' படத்தை ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸுக்காக இர்ஃபான் மாலிக்குடன் சேர்ந்து யுவன் ஷங்கர் ராஜாவும் மற்றும் கே ப்ரொடக்ஷன்ஸ் எஸ் என் ராஜராஜனும் தயாரிக்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது... "எல்லோரும் படத்தில் என்னுடைய ஆடைகள் பல்வேறு விதமாக கலந்திருப்பதை கவனித்திருப்பார்கள். ஒருபுறம் லுங்கி மற்றும் மற்றொரு புறம் மாடர்ன் ட்ரெஸ். ஒரு அப்பாவி நடுத்தர வர்க்க பையன், உயர்தர வர்க்க பெண்ணை காதலிக்க, ஒரு ஸ்டைலான பணக்கார பையனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் உள்ளார்ந்த ஆசை உள்ளது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பியார் பிரேமா காதல் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு காதல் படமாகும். இது ஒரு ஒரிஜினல் திரைப்படம் என்று நான் கூறுவேன். யுவன் சார் இப்படத்தை இசை நேர்த்தியுடன் உருவாகும் ஒரு படமாக மட்டும் உருவாக்க விரும்பவில்லை. இந்த படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்தார். அவரது சமரசமற்ற தன்மை தான் நாம் அனைவரும் பார்த்த ப்ரோமோ காட்சிகள் மற்றும் டிரெய்லரில் தெரிந்தது" என்றார்.