மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடயே மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு, சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கத்தினர், அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். மேலும் இந்த கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “என்னுடைய பணிவான பங்களிப்பு. கை கோர்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
My humble contribution.
கை கோர்ப்போம் #Chennai 💪#ChennaiFloodRelief #chennaifloods @CMOTamilnadu pic.twitter.com/CiqBV4SCsm— Harish Kalyan (@iamharishkalyan) December 6, 2023