Skip to main content

கையில் டீசல் பம்புடன் ஹரிஷ் கல்யாண்; பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான போஸ்டர்

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

harish kalyan, athulya 'diesel' movie first look poster released

 

'வில் அம்பு', 'பியார் பிரேமா காதல்', 'தாராள பிரபு' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து, முன்னணி இளம் ஹீரோக்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இவர் அடுத்ததாக 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

 

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண், நாளை (29.06.2022) தனது 32-வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 'டீசல்' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அதுல்யா கதாநாயகியாக நடிக்கிறார். வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். 'எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்' தயாரிக்கும் இப்படத்தை அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இயக்குகிறார். 

 

பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரில் படத்தின் தலைப்புக்கேற்ப கையில் டீசல் பம்புடன் ஹரிஷ் கல்யாண் நிற்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்