Skip to main content

"உலக சினிமாவின் பொக்கிஷம் நீங்கள்" -ஹரிஷ் கல்யாண் பாராட்டு!

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
kiug

 

 

1959ஆம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மாவில் ஆரம்பித்து இன்று எடுத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 வரை தொடர்ந்து 61 ஆண்டுகள் திரைத்துறையில் நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என பல்வேறு சாதனைகள் படைத்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து நேற்றோடு (ஆகஸ்ட் 12) 61 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதற்கு திரைத்துறையை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கமலுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் கமல்ஹாசனுக்கு சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து அவருடைய #61YearsOfKamalismCDP என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில்...   

 

"உங்களின் 61 ஆண்டு சாதனை பயணம் என்னை போல் வளர்ந்து வருபவர்களின் பாதையில் இமயம். நீங்கள் தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவின் பொக்கிஷம். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் கமல் சார். #61TrailBlazingYrsOfKAMAL" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்