Published on 21/10/2023 | Edited on 21/10/2023
![hari father passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/JEtQ0fLduh40dY1tG1hpNzyE-9bgbKoiWen6j33LbdA/1697866699/sites/default/files/inline-images/65_54.jpg)
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராக வலம் வரும் ஹரி, தற்போது விஷாலை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் காரைக்குடியில் முடிந்தது. இயக்குநர் ஹரியின் தந்தையான வி.ஆ.கோபாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
சிறிது காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த கோபாலகிருஷ்ணன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மறைந்திருப்பது ஹரி குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்குகள் நடைபெறவுள்ளது.