கடந்த 15 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகவுள்ள படம் 'மஹா'. அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்க, ஜிப்ரான் இசை அமைப்பில், எலெக்ட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இப்படம் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாகிவுள்ளது. மேலும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது... "ஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேயே நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும், ரசிகர்கள் மனதில் அவருகென்று நிலையான இடத்தை தந்து இருக்கிறது. அவருடைய இமேஜை மனதில் வைத்து, அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள இயக்குனர் யு.ஆர்.ஜமீல் கதையை ஹன்சிகாவை மனதில் வைத்து எழுதி இருக்கிறார்.
இந்த கதை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார்.ஒரு தயாரிப்பாளராக அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். அதற்கு உகந்ததாக 'மஹா' இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. தமிழ் திரை ரசிகர்களுக்கு இந்த திரைப் படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ் திரை உலகில் நீடிப்பார் என நம்புகிறேன். மேலும் 'மஹா' திரைப்படம் மூலம் ஹன்சிகாவுக்கு இளவரசி என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக் குழுவினருக்கு பெரிய பெருமை" என்றார்.