Skip to main content

முன்னணி இயக்குநருடன் கைக்கோர்த்த ஜி.வி.பிரகாஷ்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

gv prakash

 

‘டார்லிங்’ படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தயாராகியுள்ள ‘அடங்காதே’, ‘ஜெயில்’ ஆகிய படங்கள் ரிலீசிற்குத் தயாராக உள்ளன. இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் ராஜேஷுடன் கைக்கோர்த்துள்ளார்.

 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். ஆனந்த்ராஜ், டேனியல், நடிகை ரேஷ்மா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு, 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. படத்தினை கோடை விடுமுறைக்குத் திரைக்கு கொண்டுவர தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.

 

இதற்கு முன்பு, ராஜேஷ் - ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் 'கடவுள் இருக்கான் குமாரு' படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்