Skip to main content

''என் சகோதரன் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்'' - ஜிவி பிரகாஷ் இரங்கல்!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020

 

gdsg

 

இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், ஜிவி பிரகாஷின் '4ஜி' படத்தின் இயக்குனருமான வெங்கட் பாக்கர் (எனும்) அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூரைச் சார்ந்த அருண்பிரசாத் மேட்டுப்பாளையத்திற்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் '4ஜி' பட இயக்குனர் வெங்கட் பாக்கருக்கு சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

 

''எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்... அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.. நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும்'' எனப் பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்