Skip to main content

95வது ஆஸ்கர் விருது விழா; இந்திய சார்பில் போட்டியிடும் படம் அறிவிப்பு

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Gujarati film Chhello Show is India's official entry for 95 Oscars award

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 


 
அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதில் இந்தியா சார்பாக போட்டியிட குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் தேர்வாகியுள்ளது. பேன் நளின் இயக்கத்தில் வெளியான இப்படம் ஏற்கனவே சில சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளது. 

 

இதனிடையே ராஜமௌவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் பைல்ஸ்' உள்ளிட்ட சில படங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்படும் தேர்வு போட்டி பட்டியலில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்