![dhanush](http://image.nakkheeran.in/cdn/farfuture/KXn_5DGy4aJ7jebjH1Qa7452IE6eZgaemCc4Mwszf5o/1608616660/sites/default/files/inline-images/56_27.jpg)
ரூசோ பிரதர்ஸ் என அறியப்படும் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ இருவரும் இணைந்து, அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர்கள் ஆவர். இவர்களது இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படம் ‘தி கிரே மேன்’. இப்படமானது, ‘தி கிரே மேன்’ என்ற ஆங்கில நாவலைத் தழுவி உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிகர் தனுஷும் நடிக்க உள்ளார் என்ற செய்தியை தயாரிப்பு நிறுவனமான நெட்பிளிக்ஸ் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனையடுத்து, தமிழ்த் திரை ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியத் திரை ரசிகர்களும் தனுஷிற்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இது குறித்தான வாழ்த்துப் பதிவுகள் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில், கலிஃபோர்னியா மாகாணத்தில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதால், படத்தின் படப்பிடிப்பை படக்குழு ஒத்தி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.