Skip to main content

"300 வருஷமா விதைத்த பயம்" - தகர்த்தெறியப் போராடும் கிராமம்

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

Gautham Karthik in August 16 1947 movie teaser released

 

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்படங்களை கொடுக்கும் இவர்  'ஏ.ஆர் முருகதாஸ் ப்ரொடைக்ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் 'ரங்கூன்' படத்தை தொடர்ந்து தற்போது ‘ஆகஸ்ட் 16 - 1947' படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் அறிமுக நாயகி ரேவதி நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

 

இந்நிலையில் ‘ஆகஸ்ட் 16 - 1947' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீசரை சிம்பு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இப்படம் ஒரு கிராமத்தில் வாழும் அப்பாவி மக்கள், சுதந்திரம் பற்றி புரிந்து கொண்டு, பின்பு சுதந்திரம் பெற்றார்களா இல்லையா என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்வது போல் வெளியாகியுள்ளது. அதோடு விரைவில் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்