Published on 09/07/2020 | Edited on 09/07/2020

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை ஜெயந்தி. இவர் எம்.ஜி.ஆருடன் படகோட்டி, ஜெமினி கணேசனுடன் புன்னகை, இரு கோடுகள் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
இந்நிலையில் நடிகை ஜெயந்தி திடீரென பெங்களூரு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக கடுமையான ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் இன்ஹேலர் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மருத்துவர்கள் நடிகை ஜெயந்திக்கு தீவிரமாகச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.