நாட்டுப்புற இசைக் கலைஞராக இருந்து சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற 'மதுர குலுங்க குலுங்க' பாடலை பாடி தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானவர் வேல்முருகன். 'ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா', 'ஒத்த சொல்லால' போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அந்த வகையில் 2019ல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் 'கத்தரி பூவழகி' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தார்.
இந்நிலையில் வேல்முருகனின் மகள் ரக்ஷனா கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். ஒரு நிமிடங்களில் 51 பல்கலைக்கழக சின்னங்களை அடையாளம் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். வேல்முருகன் தனது குடும்பத்தோடு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். தன் மகள் ரக்க்ஷனா படைத்த கின்னஸ் சாதனை சான்றிதழை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துகளை பெற்றார். வேல்முருகன், ஐயாயிரம் நாட்டு புற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.