Published on 09/07/2020 | Edited on 09/07/2020
1951ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி, பின்னர் முன்னணி நகைச்சுவை நடிகராக பாலிவுட்டை கலக்கியவர் ஜகதீப். இவரின் இயற்பெயர் செய்யது இஷ்தியாக் அகமது ஜாஃப்ரி ஆகும்.
இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஷோலே படத்தில் போபாலி என்னும் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு 8.30 மணிக்கு வயது மூப்பின் காரணமாக ஜகதீப் உயிரிழந்தார். அவருக்கு வயது 81.
ஷோலே படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை மனதில் கொண்டு ‘ஷூர்மா போபாலி’ என்ற பெயரில் ஒரு படத்தை 1981 ஆம் ஆண்டு ஜகதீப் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.