Skip to main content

"என்னை வளர்த்த எம்.ஜி.ஆரும் சினிமாக்காரர் தான்" - நினைவுகூர்ந்த துரைமுருகன்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

duraimurugan speech at Raavana Kottam trailer launch

 

ஷாந்தனு பாக்யராஜ், ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் தமிழக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். 

 

இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய போது "தயாரிப்பாளர் சுபாஸ்கரன் என்னிடம் வந்து பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்கப் போகிறேன் என்று கூறினார். நான் அந்த கதையை 10 முறை படித்தவன். அதனால் அது சினிமாவுக்கு சரியாக வராது என்றேன். ஆனால், என் பேச்சைக் கேட்காமல் ’தமிழுக்காக இந்த படத்தை தயாரிக்கிறேன்’ என்று அவர் எடுத்தார். படம் மகத்தான வெற்றி பெற்றது. 

 

அதேபோல் என் பேச்சை கேட்காமல் தயாரிப்பாளர் கண்ணன் ரவி ’ராவண கோட்டம்’ என்ற படத்தை எடுத்துள்ளார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கிறேன். சினிமா என்பது கத்தி மேல் நடப்பது மாதிரி. நான் சினிமாக்காரர்களோடு வாழ்ந்து இருக்கிறேன். என் தலைவர் சினிமாக்காரர். என்னை வளர்த்த எம்.ஜி.ஆரும் சினிமாக்காரர் தான். ஆனால் நான் சினிமாவில் இல்லை. அதை எடுக்கிற வசதியும் இல்லை" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்