உலகளவில் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான 94-வது ஆஸ்கர் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் வில் ஸ்மித்தின் நடவடிக்கை பெரும் பேசும் பொருளாக மாறி, பின்பு வில் ஸ்மித் 'அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பின் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது அங்கு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' அமைப்பில் சேர உலகளவில் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், இந்தி இயக்குநர் ரீமா காட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள சூர்யாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பல திரைபிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையும் சூர்யாவைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர். இந்த கவுரவம் மகத்தானது. நடிகர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ்நடிகர். இந்த கவுரவம் மகத்தானது. நடிகர் திரு @Suriya_offl அவர்களுக்கு வாழ்த்துகள். @sunnewstamil @news7tamil @News18TamilNadu @Kalaignarnews @ThanthiTV pic.twitter.com/nsGTwDWn0o
— Selvaperunthagai K (@SPK_TNCC) June 29, 2022