Skip to main content

"தற்கொலை செய்யவும் நினைத்தேன்; ராகுல் காந்தி தான் உதவினார்" - எமோஷனலான நடிகை

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

divya spandana about rahul gandhi

 

சிம்புவின் 'குத்து', தனுஷின் 'பொல்லாதவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகை ரம்யா. திவ்யா ஸ்பந்தனா என்ற பெயர் கொண்ட இவர் திரையில் ரம்யா என்ற பெயரை பயன்படுத்தி பின்னர் தனது பெயரிலேயே நடித்து வந்தார். நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வரும் ரம்யா 2013 ஆம் ஆண்டு மண்டியா மக்களவை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

 

பிறகு அரசியலில் அதிக கவனம் செலுத்தி வந்த ரம்யா 2016க்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ரோஹித் பதகியின் 'உத்தரகாண்டா' என்ற கன்னடம் படம் மூலம் மீண்டும் திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் ரம்யா. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திவ்யா ஸ்பந்தனா, அவர் எம்.பி ஆனது குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகள் குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசுகையில், "எனது தந்தையை இழந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் நுழைந்தேன். பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அங்கு யாரையும் தெரியாது. ஆனால், நான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். நான் என் வருத்தத்தை என் வேலையை நோக்கி செலுத்தினேன். அந்த நம்பிக்கையை எனக்கு கொடுத்தது மண்டியா மக்கள்தான்.

 

என் வாழ்வில் முதல் வழிகாட்டி என் அம்மா. இரண்டாவது என் தந்தை. அடுத்து மூன்றாவதாக ராகுல் காந்தி தான். நான் என் தந்தையை இழந்தபோது, ​​​​நான் பெரும் துயரத்தில் இருந்தேன். தற்கொலை செய்து கொள்ளவும் நினைத்தேன். போட்டியிட்ட தேர்தலிலும் தோற்றேன். அது மிக மோசமான காலகட்டம். அந்த நேரத்தில் ராகுல் காந்தி தான் எனக்கு பெரிதும் உதவினார்" என எமோஷனலாக பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்