Skip to main content

"டாணாக்காரன் யாரிடம் போய் சேர வேண்டுமோ அவர்களிடம் சேர்ந்துவிட்டது" - இயக்குநர் தமிழ்

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

director tamil says Taanakkaran film

 

விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் வெளியான படம் 'டாணாக்காரன்'.  காவல்துறையின் பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்கள், மிரட்டல்கள், அரசியல் போன்றவற்றை நேரடியாகத் தோலுரித்துக் கட்டியுள்ள இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தை சினிமா விமர்சகர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் பாராட்டினார். 

 

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சி பள்ளிகளிலும் டாணாக்காரன் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பெரும் பள்ளியில் டாணாக்காரன் படத்தின் திரையிடலுக்கு இயக்குநர் தமிழ் அழைக்கப்பட்டார். அங்கு பயிற்சி பெரும் காவலர்கள் படத்தை கண்டுகளித்தனர். 

 

இது தொடர்பாக இயக்குநர் தமிழ் வெளியிட்ட சமூக வலைதளப் பக்கத்தில், அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி திரையிடலுக்கு என்னை அழைத்து இருந்தார்கள் படம் பார்த்து விட்டு காவலர் பயிற்சியில் உள்ள காவலர்களுடன் உரையாடும் வாய்ப்பை நிர்வாகம்  எனக்கு அளித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது படத்தை திரையிட ஆணை பிறப்பித்த காவலர் பயிற்சி துறை தலைவர் அருண் I.P.S அவர்களுக்கும் அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் மணிவண்ணன் ஐ.பி.எஸ் அவர்களுக்கும் நன்றி. இறுதியாக அங்கிருந்து. கிளம்பும் போது அங்கு இருந்த முதன்மை அதிகாரியிடம் டாணாக்காரன் திரைப்படத்தை ஏன் திரையிடல் செய்கிறீர்கள் என்று நான் கேட்ட போது "எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மக்களுக்காக உழைக்க நினைக்கும் காவலர்கள் இந்த சிஸ்டத்திற்க்குள் வர வேண்டும் என நீங்க  சொன்ன செய்தி இந்த பசங்களுக்கு போய் சேர வேண்டும் என்று காவல் துறை தலைவர் சொன்னார். அதனால்தான் இந்த திரையிடல்"என அவர் சொன்ன போது கொஞ்சம் அதிர்ச்சியாகித் தான் நின்றேன். டாணாக்காரன் திரைப்படத்திற்க்கு காவல்துறையில் இருந்து வந்த பாராட்டையும் திரையிடலையும் மிகவும் உயர்வாகவும் அன்புடன் ஏற்கிறேன். டாணாக்காரன் யாரிடம் போய் சேர வேண்டுமோ அவர்களிடம் போய் சேர்ந்து விட்டதாகவே உணர்கிறேன், நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்