Skip to main content

"பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில்..." - பா. ரஞ்சித் பேச்சு

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

director pa ranjith talk about cinema

 

சமூக கருத்துக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களையும் திரைப்படத்தின் மூலம் வெளி கொண்டு வரும் இயக்குநர்களில் முக்கியமானவர் பா.ரஞ்சித். இவரின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதனிடையே பி.கே. ரோசி திரைப்பட விழா, புத்தக கண்காட்சி, மேடை நாடகங்களும் நடைபெற்று வருகிறது. 

 

அந்த வகையில் நேற்று(17.4.2022) ஐ.சி.எஃப் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "சினிமாவிற்கு முன்பு நான் கல்லூரிக் காலங்களில் நாடகங்கள் நடத்தியிருக்கிறேன். சினிமாவைப் போல நாடகங்கள் மீதும் பெரும் விருப்பம் உண்டு. பிரிவினைவாதம் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில் கலைகள் வழியாக நாம் சமத்துவத்தையும். மனிதநேயத்தையும் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  சினிமா, மற்றும் பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், நாடகங்கள் இன்னும் என்னென்ன கலைகள் வழியாக எல்லாம் இந்த சமூகத்தில் அன்பு திளைத்திருக்க மக்கள் மத்தியில் நம்மால் பேச முடியுமோ அதை நாம் பேசுவோம். நீலம் பண்பாட்டு மையம் தொடர்ந்து மக்களிடையே சமூகத்திலிருக்கும் முரண்களை பேசுவதோடு குறைந்தபட்ச அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தொடர்ந்து மனித மாண்பை மீட்டெடுக்க இயங்குவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்