Skip to main content

ரஜினி மருமகன் விசாகன், இயக்குனர் நவீன் சர்ச்சை... அறிக்கை வெளியிட்ட நவீன்...

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் தற்போது  ‘அலாவுதீனும் அற்புத கேமராவும்’ என்று ஒரு படத்தை இயக்கி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் சொன்ன தேதியில் படம் வெளியாகவில்லை. அதற்கு என்ன காரணம் என்று முதலில் தெரியவில்லை. பின்னர், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட நவீன், தான் மூடர்கூடம் படத்தை அடுத்து சொர்ணா சேதுராமன் என்பவர் தயாரிப்பில் படம் எடுப்பதாக இருந்தது. அவர்தான் தற்போது இந்த படத்தை வெளியிட தடை செய்கிறார். அந்த பிரச்சனை குறித்து முழுவதுமாக தெரிவித்தார். 
 

naveen


நவீன் அளித்த அறிக்கைக்கு பதில் தரும் வகையில் சொர்ணா சேதுராமன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இயக்குனர் நவீன் தன்னிடம் படம் எடுப்பதாக பணம் பெற்றுக்கொண்டு. ஸ்கிரிப்ட் எழுதாமல் ஓப்பி அடித்துவிட்டார் என்று புகார் அளித்திருந்தார். சம்பந்தப்பட்ட பட விஷயமாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளதாகவும் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பதை விட்டுவிட்டு, அறிக்கை கொடுத்து ஊடகங்கள் மூலமாக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி திசைதிருப்பி, இதிலிருந்து விடுபட நவீன் திட்டமிடுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
 

இந்நிலையில் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் நவீன். “நான் Flash Films நிறுவனத்திடம் வாங்கியது அட்வான்ஸ் இல்லை, படத்தின் pre-production பணிகளுக்கான பணம். அவர் சொல்வதுபோல் நான் அவரிடன் படம் செய்ய காசு கேட்கவில்லை. என்னிடம் சுவர்ணா சேதுராமன் கையெழுத்திட்ட first copy agreement இருக்கிறது. நான் pre-production பணிகளுக்காக செய்த செலவு கணக்குகள், செக்னீஷன்களுக்கு கொடுத்த அட்வான்சுக்கான bank transactions அனைத்தும் முறையாக உள்ளது. என் தரப்பில் முறையான ஆதாரங்கள் உள்ளன. என் தரப்பு ஆதரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்கள் தரப்பில் இருக்கும் விசாகனையும் அவருடைய சித்தப்பா ராகுலனையும் கேட்டாலே நான் சொல்வது உண்மை என்றும், சுவர்ணா சேதுராமன் சொவது அனைத்தும் பொய் என்றும் சொல்வார்கள். அவர்கள் மனசாட்சியின்படி உண்மை பேசுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இன்னமும் இருக்கிறது.
 

devarattam


நான் என் தரப்பில் இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளேன். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையில் வழக்கை நடத்துகிறேன். சுவர்ணா சேதுராமன் ஊடகங்களில் நான் சிகிர்ப்ட் எழுதாததால் படம் நடக்கவில்லை என்றும், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாகவும் பொய்யாக அவதூரு பரப்புகிறார். உடன் இருந்த அனைவருக்கும் அவர் சொல்வது பொய் என்று தெரியும். உண்மை மிக விரைவில் வெளிவரும்” என்று இயக்குனர் நவீன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்