![hari](http://image.nakkheeran.in/cdn/farfuture/LcE3hhQsRdG5g3wgoutVyLlGz7Is-IF7OzpeZ7quJg0/1616139965/sites/default/files/inline-images/hari-director.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஹரி, நடிகர் அருண்விஜய் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தற்காலிகமாக 'அருண்விஜய் 33' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, பழனி சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இயக்குநர் ஹரிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், படக்குழுவில் இருந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இயக்குநர் ஹரிக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கரோனா தொற்று இல்லையென முடிவு வந்தபோதிலும், கடுமையான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் ஹரி அனுமதிக்கப்பட்டார். இதனால் 'அருண்விஜய் 33' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.