நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், நக்கீரன் ஸ்டூடியோவுடனான நேர்காணலில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அந்த நேர்காணலில், தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளான ருத்ரதாண்டவம் படத்தை பாராட்டியது ஏன் என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
"நான் படம் எடுப்பதற்கு முன்புகூட இயக்குநர் சுப்ரமணியம் புரட்சிகர கருத்துகள் நிறைந்த படத்தை எடுத்துள்ளார். என்.எஸ்.கே அவர்களும் அது மாதிரியான கருத்துகளைச் சொல்லிவந்துள்ளார். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்லியிருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடிப்பதற்கு என்றே சிலர் இருப்பார்கள். நீங்கள் என்ன படம் எடுத்தாலும் அவர்களை வெளியே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சிலர் விமர்சிக்கத்தான் செய்வார்கள். ருத்ரதாண்டவம் படத்தில் போதைப்பொருளால் இளைஞர்கள் எப்படி சீரழிகிறார்கள் என்று காட்டியிருந்தார்கள். அது நன்றாக இருந்ததால் படத்தைப் பாராட்டினேன். எங்களைக் குறிவைத்து படம் எடுத்துள்ளார்கள்... அவர்களை குறிவைத்து படம் எடுத்துள்ளார்கள் என எல்லாவற்றுக்கும் நம் ஊரில் சாயம் பூசிவிடுகிறார்கள். சிலர் எடுப்பதும் அது போன்றுதான் எடுக்கிறார்கள். ஒருவரை தாக்க வேண்டுமென்றால் அதற்கு சினிமாவை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது. சினிமா என்பது மிகவும் வலிமையான ஆயுதம். கொஞ்ச நாட்கள் கழித்து நாமே அதை மாற்ற நினைத்தால் மாற்றமுடியாது. அதனால் அதைப் பொறுப்புடன் கையாள வேண்டும்".
முழு பேட்டி