Skip to main content

‘தலைவர் 168’ படம் குறித்து டி.இமான் ட்வீட்!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தார்பார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.  தர்பார் ஷூட்டிங் முடிவடைந்தவுடனே ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 

rajnikanth


விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பாக ரஜினிகாந்த் படத்தை எடுக்கிறார்.
 

hero


ரஜினியின் 168வது படமாக உருவாகும் இதில் டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

டிசம்பர் 11ஆம் தேதி தலைவர் 168 படத்திற்கான பூஜை போடப்பட்டது. இணையத்தில் அந்த புகைப்படமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தலைவர் 168 படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. அந்த ஷூட்டிங்கை நேரில் சென்று பார்த்த இப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் ரஜினிகாந்துடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

dabaangg


மேலும் அந்த பதிவில், “எளிமையின் அடையாளமான ரஜினிகாந்த் சாரை சந்தித்தேன். முதல் நாள் படப்பிடிப்பு பாடல் கட்சியுடன் தொடங்கியது. பாடல் குறித்த அவருடைய நேர்மறை வார்த்தைகள் ஊக்கமளிக்கிறது. அவரிடமிருந்து பரவும் சக்தியும் அவர் இந்த உலகத்தில் பரப்பும் சக்தியும் அபாரம். கடவுளுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்