![Dhanush's Hollywood movie; The crew released the exclusive video](http://image.nakkheeran.in/cdn/farfuture/uT3yk3UHIXO4ogB4iBhytYWf_2A3pvNrrAz-m4eF8bo/1654679277/sites/default/files/inline-images/Untitled-8_16.jpg)
தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்குகின்றனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகிறது. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'தி கிரே மேன்' படத்தின் முதல் பிரத்யேக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இப்படத்தின் இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள். இந்த பிரத்யேக வீடியோ, படத்தில் இடம்பெறும் முக்கியமான சண்டைக்காட்சியை போல் தெரிகிறது. தனுஷ் இந்த வீடியோவில் இடம்பெறவில்லை. இப்படம் குறிப்பிட்ட திரையரங்குகளில் ஜூலை 15-ஆம் தேதியும், நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No shoes? No problem... Here is the FIRST EXCLUSIVE CLIP from #TheGrayMan, coming to Netflix July 22. pic.twitter.com/ooNweKRBXH— Russo Brothers (@Russo_Brothers) June 7, 2022