வெற்றிமாறன் - தனுஷ் ஆகிய இருவரும் அசுரன் படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி சேருகின்றனர். இப்படத்தின் படபிடிப்பு வடசென்னை படம் வெளியான ஒரு வாரத்திலேயே தொடங்கப்பட்டுவிட்டது. அதனை அடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்து ரிலீஸுக்கு தயராக இருக்கிறது.
![asuran](http://image.nakkheeran.in/cdn/farfuture/FNUT9j1xs2tR_aTR2NigbE6cr-h_0VGq7wDuAg9yM2k/1567073974/sites/default/files/inline-images/asuran_1.jpg)
கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு வாரியர்தான் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம்தான் மஞ்சு வாரியருக்கு முதல் படம்.
அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் ரிலீஸாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
![sixer](http://image.nakkheeran.in/cdn/farfuture/rpHM2kQmzoGDm4qdYbrXyXzg8CMila2bO-FuuTksYJw/1567074039/sites/default/files/inline-images/336x150%20sixer%20ad_15.jpg)
மேலும் பேசிய தனுஷ் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சுவாரியரின் நடிப்பை புகழ்ந்தார். அப்போது அவர் பேசியது. “காதல் கொண்டேன் சமயத்தில் நாகேஷ் சாரிடம் நிறைய பேசுவேன். எப்படி நடிக்கிறாங்க பாருங்க சார், நானும் அப்படி நடிக்க வேண்டும் என்று மிக ஆர்வமாகச் சொல்லுவேன். அப்போது அவர் , 'டேய் யார் உன் கண் முன்னால் பயங்கரமாக நடிக்கிறார்கள் என்று தெரிகிறதோ அதுதான் சுமாரான நடிப்பு. நடிப்பதே தெரியாமல் நடிப்பதுதான் பெரிய நடிப்பு' என்றார்.
அப்படிப் பார்த்து பயப்பட வேண்டிய ஒரு நடிகை மஞ்சு வாரியர். அவர் நடிப்பதே தெரியாது. எப்படி ஒரு கதாபாத்திரமாக நடித்துவிட்டு சட்டென இயல்பாக மாறிவிடுகிறார் என்பதே எனக்குத் தெரியவில்லை. சில முக்கியமான காட்சிகளில் நடித்துவிட்டு என்னால் அந்த கதாபாத்திரத்திலிருந்து சட்டென வெளியே வர முடியாது. அப்படியே இருப்பேன். ஆனால் அவர் நடித்து முடித்த அடுத்த நொடியே ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பார். எப்படி அவரால் முடிகிறது என்பதே தெரியாது” என்றார்.