Skip to main content

"சிறந்த திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் இது" - தனுஷ் கவலை!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021

 

asaafasvas

 

தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 

 

இதனையடுத்து தமிழில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகிவரும் நிலையில், இதை தன் சமூகவலைதளப் பக்கத்தில் ஷேர் செய்த நடிகர் தனுஷ், இப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில்... "என்ன ஒரு சிறந்த திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் இது. இப்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இருந்தாலும் கூட, நீங்கள் அனைவரும் 'ஜகமே தந்திரம்' மற்றும் சுருளியை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்