Skip to main content

தனுஷின் 40வது படத்திற்கு எம்.ஜி.ஆர் பட டைட்டில்?

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் முன்னோட்டம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 
 

d40

 

 

இந்த படம் எடுத்துகொண்டிருக்குபோதே துரை செந்தில்குமார் படத்திலும் தனுஷ் பிஸியாக நடித்து வந்தார். இது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து தனுஷின் டேட்டிற்காக ராட்சசன் இயக்குனர் ராம்குமார், இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். இவர்கள்தான் அடுத்து தனுஷை வைத்து படம் எடுக்க போகிறார்கள் என்று முன்பே அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகிவிட்டன. 

கார்த்திக் சுப்புராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷை வைத்து படம் இயக்குகிறார் என தகவல்கள் வெளியானது. அது முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாகும் படம் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்துதான் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.

அசுரன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜும் தனுஷும் இணைந்து பணிபுரிகின்றனர். லண்டனில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 60 நாட்கள் தனுஷ் தேதிகளை ஒதுக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசி தயாரிக்கிறார். தனுஷுடன் ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி என்பவர் ஜோடியாக நடிக்கிறார். வடசென்னை படத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம். இந்த படத்தையும் தாணு தயாரிக்கிறார். 

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு உலகம் சுற்றூம் வாலிபன் என்று எம்.ஜி.ஆர் பட டைட்டிலை வைத்திருக்கிறார்கள் என்று தகவல் ஒன்று வெளியானது. ஆனால், இச்செய்தியை படக்குழு மறுத்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கே கடந்த வாரம்தான் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் படத்தின் பெயர் குறித்து விவாதம் போய்கொண்டு இருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது. 

இந்தப் படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர். இவர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற உலக பிரபலமடைந்த வெப் சிரீஸில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அல்பாசினோ என்ற ஹாலிவுட் நடிகரை அனுகினார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்