
வடசென்னை படத்திற்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ளது 'அசுரன்'. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான 'வெக்கை' நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் தாணு வெற்றிமாறன் குறித்து பேசியபோது...

''வியக்கத்தக்க இயக்குநர் வெற்றிமாறன். ஒருநாள் வெற்றிமாறன் போன் பண்ணி 'தனுஷ் இன்று ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார்' என்று சொல்வார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு தனுஷ் போன்பண்ணி, 'சார் வெற்றிமாறன் போல ஒரு இயக்குநரை நீங்கள் பார்க்கவே முடியாது' என்பார் . ஒரு தயாரிப்பாளருக்கு இதைவிட என்ன சந்தோசம் என்ன வேண்டும். வெற்றிமாறனை எனக்குத் தந்த தனுஷுக்கு கோடானகோடி நன்றி" என்றார்