![deepika](http://image.nakkheeran.in/cdn/farfuture/4ErdVSdpLaWtc-_V7NejUDrcOQmGTbshaVKNTk9Zy4g/1533347632/sites/default/files/inline-images/Padmavati-66.jpg)
தீபிகா படுகோன் சித்தூர் ராணியாக நடித்து, பல எதிர்ப்புகளை மீறி வெளிவந்த பத்மாவத் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. தீபிகா படுகோன் தலைக்கு விலை நிர்ணயித்தப்போதும் அசராமல் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். மேலும் இப்படத்தில் தீபிகா படுகோன் அணிந்த உடைகளும், நகைகளும் பலரிடம் பாராட்டுகள் பெற்று பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இந்நிலையில் படத்தில் அணிந்த நகைகள், உடைகள் குறித்து தீபிகா பேசுகையில்... "பத்மாவத் என் வாழ்வில் முக்கியமான படம். அதில் நான் அணிந்திருந்த நகைகள், உடைகளில் பெண்களும், ரசிகர்களும் மனதை பறிகொடுத்தனர். நான் எங்கு போனாலும் அந்த உடைகள், நகைகள் பற்றியே பேசினார்கள். குறிப்பாக கிளைமாக்சில் தீயில் குதித்து இறக்கும்போது நான் அணிந்திருந்த உடைகளும் என் முகபாவனைகளும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. ரசிகர்களை போல் நானும் கிளைமாக்சில் அணிந்த உடைகள் மீது எனது மனதை பறிகொடுத்து இருக்கிறேன். எனவே அவற்றை என்னுடனேயே நினைவுப்பொருளாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த உடைகளை எனக்கு தரும்படி டைரக்டரிடம் கேட்டு இருக்கிறேன்" என்றார்.